சர்வதேச கலைஞர்கள் தினத்தை முன்னிட்டு ஓவிய பயிற்சிப் பட்டறை தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காட்சித் தொடர்பியல் துறையின் மாணவ மன்றம் சார்பாக மாணவர்களுக்கு, இன்று காலை 10:30 மணி அளவில் கல்லூரியின் தந்தை பெரியார் கலையரங்கத்தில் நடைபெற்றது. Exploring Colour Theory Through Mixed Media என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த பயிற்சி பட்டறைக்கு கல்லூரி முதல்வர் முனைவர் விஜயலட்சுமி அவர்கள் தலைமை தாங்கினார்.

அவரது தலைமை உரையில் மாணவர்கள் சிகரங்களையும், உயரங்களையும் அடைய சரியான வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார். இதில் சிறப்பு விருந்தினராக காமிக் ஆர்ட்டிஸ்ட் பாலசண்முகம் பங்கேற்று மாணவர்களுக்கு கலர் தியரி (Colour Theory) குறித்து பயிற்சி அளித்தார். அவரது சிறப்பு உரையில் வரலாற்று சிறப்புமிக்க காலங்களை, கற்பனையோடு கலந்த புதுப்புது கண்ணோட்டத்தில், காட்சிகளோடு தொடர்புபடுத்தி காட்டுவதே காட்சித் தொடர்பியல் துறை மாணவர்களின் பெரும்பங்கு எனவும்,

இந்த ஆர்வம் உங்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் எனவும் கூறினார். இந்த ஒரு நாள் பயிற்சி பட்டறையில் காட்சி தொடர்பியல் துறையின் 100க்கும் மேற்பட்ட மாணவர்களும்,பிற துறை பேராசிரியர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை காட்சித் தொடர்பியல் துறைத்தலைவர் டக்டர் . ப்ளெஸ்ஸி ஒருங்கிணைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *