நேபாளம் நாட்டில் யூத் சாம்பியன்ஷிப் இந்தியா என்கின்ற சர்வதேச அளவிலான தடகளப் போட்டிகள் கடந்த 27 28 29 ஆகிய தினங்களில் நடைபெற்றது. இந்த சர்வதேச அளவிலான தடகளப்போட்டியில் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து பயிற்சியாளர் நாகராஜ் தலைமையில் 60 பேர் கலந்து கொண்டனர். இதில் திருச்சி சமயபுரம் மற்றும் தாளக்குடி பகுதியை சேர்ந்த அபினேஷ், ஜெயசூர்யா ஆகிய இரண்டு பேர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர்.
அபினேஷ் 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப் பந்தயத்திலும், ஜெயசூர்யா 3 ஆயிரம் மீட்டர் ஓட்டப் பந்தயத்திலும் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். இந்நிலையில் தங்க பதக்கங்களை வென்று இன்று காலை திருச்சி ரயில் நிலையத்திற்கு வந்த வீரர்கள் இருவருக்கும் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் சால்வை மற்றும் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து தடகள வீரர் அபினேஷ் நிருபர்கள் அளித்த பேட்டியில் கூறியதாவது:-திருச்சி மாவட்டம் சார்பில் மூன்று தடவ வீரர்கள் நேபாளத்தில் நடந்த சர்வதேச தடகளப் போட்டியில் பங்கேற்றம் அபினேஷ் ஆகிய நான் 5000 மீட்டர் போட்டோ போட்டியில் தங்கமும் ஜெயசூர்யா 3000 மீட்டர் ஓட்டத்தில் தங்கமும் மற்றும் அருண்குமார் 800 மீட்டர் ஓட்ட போதைகள் சில்வர் என பதக்கங்களை பெற்று திருச்சி திரும்பி உள்ளோம். எங்களுடைய அடுத்த லட்சியம் ஒலிம்பிக்கில் பங்கு பெற வேண்டும் என்பதற்காக கடினமாக உழைக்கப் போகிறோம் மேலும் தமிழக அரசு எங்களை போன்ற விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.