திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கத்தில் மத்திய அரசு ரோஜ்கர் மேளா என்ற 6 -வது வேலை வாய்ப்பு விழா நடைபெற்றது. இதில் வங்கிகள், கஸ்டமஸ், இரயில்வே துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஒலிபரப்பு துறை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்துக்கொண்டார்.

இந்நிகழ்வில் மேடையில் பேசிய மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ..

கடந்த ஆகஸ்ட் மாதம் சுதந்திர தின விழாவில் ஒரு வருடத்தில் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாத பிரதமர் மோடிஅறிவித்தார். தற்போது இந்த 1வருடத்தில் மட்டும் 4.20 லட்சம் பேருக்கு வழங்கி உள்ளார். மீதம் வேலை வாய்புகள் விரைவில் வழங்கப்படும் என்றார். பாஜக மற்றும் கூட்டணியில் உள்ள அனைத்து மாநிலத்திலும் வேலை வாய்ப்பு முகாம் நடத்தபட்டு வருகிறது.இந்நிலையில் இன்று பணி நியமன ஆணையை பெறும் நம்முடைய இளைஞர்கள், வரும் தலைமுறைகளை வழிநடத்தும் அதிகாரிகளாக இருக்க வேண்டும். மேலும், இன்று மட்டும் இந்திய முழுவதும் 45 இடத்தில், 71,000 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப் படுகிறது. தொடர்ந்து மத்திய அரசு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறது. 2014ம் ஆட்சிக்கு வந்து பாஜக அரசு கடந்த 9 – ஆண்டுகளில் மகத்தான சாதனை செய்து வருகிறது. நெடுஞ்சாலை துறை, விமான நிலையம் கட்டமைப்பு, இந்தியாவின் டெக்ஸ்டைல்ஸ் துறையில் பெரும் கட்டமைப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆட்சிக்கு வரும் போது மெட்ரோ ரயில் திட்டமானது 5 நகரங்களில் இருந்தது. தற்போது 27 நகரங்களில் மெட்ரோ ரயில் செயல்படுகிறது. எழைகளின் அரசாக பாஜக செயல்படுகிறது.

குறிப்பாக அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தை நிறைவேற்றி வருகிறோம். வீட்டுக்கு வீடு குடிநீர் வழங்கப் பட்டுள்ளது.‌மேலும் 80 கோடி பேருக்கு ரேஷன் கார்டு மூலம் அரிசி, பருப்பு வழங்கப்படுகிறது. புதிய தேசிய கல்வி கொள்கை அடிப்படையில் தாய்மொழியில் கல்வி கற்க வேண்டும் என்பது கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த கொள்கையானது சர்வதேசத்துக்கு இணையாக கல்வி கொள்கையாக உள்ளது. 1 லட்சம் புதிய startup நிறுவனம் துவங்கப்பட்டு இந்தியா 5 – வது பொருளாதார நாடாக உயர்ந்த உள்ளது. தொடர்ந்து பல்வேறு துறைகளில் பணியில் சேர உள்ள இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். பணி நியமனம் பெறுவதற்க்காக தமிழகத்தில் பல்வேறு பகுதியை சேர்ந்த 200க்கு மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் மத்திய அரசு அதிகாரிகள் ராமலிங்கம், ரியாஸ்குல்கர் மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *