திருச்சி ஜங்ஷன் பஸ் நிலையம் அருகே மது அருந்திய 3 பேர் போதையின் உச்சத்தில் சாலையில் நடந்து சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி ஜங்ஷன் பஸ் நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் மது அருந்திய 3 பேர் போதையின் உச்சத்திற்கு சென்றதால் சாலையின் நடுவில் ரகளையில் ஈடுபட்டனர். மேலும் அவ்வழியாக நடந்து சென்ற பெண்கள் மற்றும் ஆண்கள் மீது தாக்குதல் நடத்திய அநாகரிகமாக பேசியுள்ளனர்.
இது குறித்து கண்டோன்மெண்ட் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தவுடன் காவல்துறையினர் வரும்முன் அந்த 5 பேரும் தப்பித்து ஓடிவிட்டனர். அதில் ஒருவர் மட்டும் போலீசாரிடம் சிக்கிக் கொண்டார். பின்னர் அவரை போலீஸ் வாகனத்தில் ஏற்றி விசாரணை நடத்தினர். தொடர்ந்து திருச்சி ஒத்தக்கடை பகுதியில் நின்று கொண்டிருந்த மற்றொருவரையும் காவல்துறையினர் அதிரடியாக வந்து சுற்றிவளைத்து கைது செய்தனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பிடிபட்ட இருவரையும் கொண்டு வந்து காவல் நிலையத்தில் வைத்து காவல் ஆய்வாளர் சேரன் நடத்திய விசாரணையில் நெய்தலூர் காலனியைச் சேர்ந்த கார்த்தி, ஜெயராம், வடிவேல் ஆகிய 3 பேரும் கட்டிட வேலை செய்பவர்கள் என்பதும் பொங்கல் பண்டிகை விருந்ததாக ஜங்ஷன் பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது விருந்து கொடுத்துள்ளனர்.
பொங்கல் பண்டிகைக்காக மது அருந்திவிட்டு போதையின் உச்சத்தில் சென்ற 5 பேர் தற்போது கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இவர்களை போலீசார் சிறப்பு கவனிப்பு கவனித்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.