இந்திய திருநாட்டின் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு திருச்சி கோபால்தாஸ் ஜுவல்லரி நிறுவனம் சார்பில் திருச்சி மாவட்டத்தில் சிறப்பாக சமூக பணிகளை செய்து வரும் சமூக ஆர்வலர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்று வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் பல ஆண்டுகளாக பல்வேறு சமூக நல பணிகளை செய்து வரும் இறகுகள் அறக்கட்டளையின் நிர்வாகி மரியா மெர்சி அவர்களுக்கு கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதி உள்ள இறகுகள் முதியோர் இல்லம் பெற்றோர் பாதுகாப்பு மையத்தில் நடந்த 76வது குடியரசுதின கொண்டாட்டத்தின் நிகழ்ச்சியில் இறகுகள் தொண்டு நிறுவன அகடமின் நிறுவனர் மரிய மெர்சி அவர்களுக்கு இறகுகள் முதியோர் இல்லத்தில் உள்ள முதியவர்கள் மற்றும் இறகுகள் அகாடமி மாணவர்கள் மகிழ்ச்சியுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து மரிய மெர்சி அவர்கள் குடியரசு தின வரலாறை மிகச் சிறப்பாகவும் துல்லியமாகவும் முதியவர்களுக்கும் மற்றும் மாணவர்களுக்கும் புரியும் வண்ணம் எடுத்து உரைத்தார் .

மேலும் மரிய மெர்சி அவர்களுக்கு இறகுகள் முதியோர் இல்லத்தில் உள்ள முதியவர்களான ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை 96 வயதான கற்பகம் அவர்கள் மற்றும் 86 வயதான BHEL நிறுவனத்தின் முன்னாள் மேலாளர் இக்பால் ஆகியோரிம் தனது விருதை காண்பித்து ஆசிர் பெற்றுக் கொண்டார் இந்நிகழ்வில் இறகுகள் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் ராபின் மற்றும் இறகுகள் முதியோர் இல்லத்தில் உள்ள முதியவர்கள் மாணவர்கள் உள்ளிட்டோர் தங்களின் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்