தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் தொடர் வேலை நிறுத்த போராட்ட விளக்க செயற்குழு கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள சுசி ஹாலில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில கௌரவ செயலாளர் குப்புராஜ் வரவேற்புரையாற்றிட, மாநிலத் தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார் . மாநிலச் பொதுச் செயலாளர் காமராஜ் பாண்டியன் சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் ஓய்வு பெற்றோர் சங்கத்தின் மாநில தலைவர் செல்லமுத்து முன்னிலை வகித்தார்.தமிழகம் முழுவதும் இருந்து நிர்வாகிகள் மற்றும் அமைப்பினர் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து பொதுச் செயலாளர் காமராஜ் பாண்டியன் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 4500 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் எம் எஸ் சி மற்றும் ஏ எல் பி திட்டங்களின் கீழ் விவசாய உபகரணங்களை வாங்கி கட்டாயப்படுத்துவதை அரசு கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 26 09 23 அன்று அனைத்து மண்டலங்களிலும் மண்டல இணைப் பதிவாளரிடம் கோரிக்கை மணி அளித்தோம் அதை தொடர்ந்து கோரிக்கைகள் நிறைவேறாத நிலையில் கடந்த 03.10 .23 முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் அனைத்து பணியாளர் ஈடுபட்டு வருகின்றனர் தற்போது அரசு எம் எஸ் சி மற்றும் ஏஎல்பி(மல்டி சர்வீஸ் சென்டர் மற்றும் அக்ரிகல்சுரல் இன்ஸ்டாராஸ்ட்ரக்சர்) திட்டத்தை அமல்படுத்துவதை கைவிட வேண்டும் அதேபோன்று ஊதிய உயர்வு உடனடியாக எங்களுக்கு வழங்கப்பட வேண்டும் செயலாளர்கள் பணியிட மாறுதலைப் பொறுத்தவரை அது குறித்து அமைக்கப்பட்ட கமிட்டியின் அறிக்கைகளைப் பெற்று அதன் பின்னர் அதை அமல்படுத்த வேண்டும்.அதுவரை செயலாளர் பணியிட மாறுதல் நிறுத்தி வைக்கப்பட வேண்டும் அதைப்போல கூட்டுறவு சங்கங்களில் கடந்த காலங்களில் நகைகள் ஏலம் விடப்பட்டவகையில் இழப்பீட்டுத் தொகையை சங்க நட்டக்கணக்கில் ஏற்றுக்கொண்டு தக்க உத்தரவு பிரிக்க பிறப்பிக்க வேண்டும்

தமிழகம் முழுவதும் உள்ள 4500 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக வேலைப்பளு பெரிதும் பாதிக்கப்படுகிறது எனவே காலிப் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும் அதைப்போலவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பயிர் கடன் தள்ளுபடியில் அறிவிக்கப்பட்ட தள்ளுபடி விதிமீறல்கள் என அறிவிக்கப்பட்ட சேலம் நாமக்கல் என காரணம் காட்டி அங்கு பணியாளர்களுக்கு பணி ஓய்வு அறிவிக்கப்பட்டு பணி பயன்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பது நிபந்தனை இன்றி உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் இது குறித்து மேலும் அரசு காலதாமதம் செய்யும் பட்சத்தில் எதிர்வரும் 09 10 23 அன்று தமிழகத்தில் சுமார் 7 மண்டலங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் அதனைத் தொடர்ந்து கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் 12 10 23 அன்று அனைத்து மாவட்டங்களிலும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என தெரிவித்துக் கொள்கிறோம் என பேட்டி அளித்தார். கூட்டத்தில் இறுதியாக திருச்சி மாவட்ட செயலாளர் காமராஜ் நன்றியுரையாற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *