சுதந்திர போராட்ட தியாகியும், இந்திய நாட்டின் விடுதலைக்காக 29 முறை சிறை சென்ற வருமான எஸ்.எஸ். விஸ்வநாததாஸ் அவர்களின் 81 வது நினைவு தினத்தையொட்டி தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் நல சங்க ஸ்ரீரங்கம் நகரம் சார்பில் ஸ்ரீரங்கத்தில் எஸ்.எஸ். விஸ்வநாததாஸ் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.
பின்னர் நடைபெற்ற கூட்டத்திற்கு சங்கத் தலைவர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். ஆலோசகர் சுரேஷ் வரவேற்றார். செயலாளர் ராஜலிங்கம், இளைஞர் அணி செயலாளர் மாரிமுத்து ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் சென்னையில் உள்ள தியாகி எஸ்.எஸ். விஸ்வநாததாஸ் சமாதியை சீர்செய்ய வேண்டும். 1.1.22 முதல் கட்டிங் சேவிங் கட்டணம் ரூ 200 ஆக உயர்த்துவது. சுகாதாரம் கருதி அக்குள் முடி எடுக்கப்பட மாட்டாது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் அமைப்பாளர்கள் ஜீவரத்தினம் பிரபாகரன், ரகுராமன், மோகன்ராஜ், சின்னராஜா, ரமேஷ் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.முடிவில் பொருளாளர் சங்கர் நன்றி கூறினார் .