சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ. சிதம்பரனாரின் 154 வது பிறந்தநாளையொட்டி திருச்சி கோர்ட் அருகே உள்ள அவரது சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் எச். ராஜா, மாவட்ட தலைவர் ஒண்டி முத்து ஆகியோர் மாலை அணிவித்த மரியாதை செலுத்தினர்.
இதில் பொதுச் செயலாளர்கள் காளீஸ்வரன், அழகேசன்,வர்த்தக பிரிவு மாநில செயலாளர் எம்.பி. முரளிதரன், முன்னாள் மாவட்டதலைவர் பார்த்திபன், இல.கண்ணன், பெருங்கோட்ட பொறுப்பாளர் எம்.கே.பாலன், துணை தலைவர்கள் கள்ளிக் குடி ராஜேந்திரன், லீமா சிவக்குமார், யசோதன், நாகேந்திரன், தொழிற்பிரிவு ஸ்ரீராம் சங்கர், மண்டல் தலைவர் எஸ்.ஆர். ராஜேஷ், மகளிர் அணி புவனேஷ்வரி, மலர்க்கொடி செந்தில்குமார், மாநில பொதுகுழு உறுப்பினர் பால்ராஜ், கோபிநாத், எஸ்.பி. சரவணன், புருஷோத்தமன், மண்டல் தலைவர்கள் எஸ்.ஆர். ராஜேஷ், வேணுகோபால், ரமேஷ், விஜய் ஆனந்த், பிரகாஷ் கார்த்திக் சுப்ரமணியன். தாய்மணி, நந்தா பாலா அணிதா சசிகுமார் அன்பு லாவண்யா மரியா வின்செண்ட் கிளாரின் கண்ணதாசன் கவிதா மோகன், ஊடகப் பிரிவு முரளி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.