இந்திய சுதந்திரப் போராட்ட வீரர், செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழர் வ.உ..சிதம்பரனாரின் 154 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் எதிரில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு திமுக சார்பில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பழனியாண்டி மற்றும் திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆகியோர் வ உ சியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அருகில் தமிழ்நாடு சோழிய வெள்ளாளர் சங்க மாநில தலைவர் டாக்டர் வி.ஜ.செந்தில் பிள்ளை, தமிழக வெள்ளாளர் முன்னேற்ற கழக மாநில தலைவர் ஆர். வி.ஹரிஹரூன் பிள்ளை மற்றும் நிர்வாகிகள் திமுக உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.