தமிழகத்தில் வரலாறு காணாத சொத்துவரி உயர்வை பாதியாக குறைக்க வேண்டும் என – தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் கோரிக்கை விடுத்துள்ளார்.
அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
மாநகராட்சி , நகராட்சிகளில் உள்ள சொத்துக்களுக்கு 25 சதவீதம் முதல் 150 சதம் வரை சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது . மாநகராட்சி , நகராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தினால் தான் ஒன்றிய அரசின் சார்பில் அறிவிக்கப்படும் திட்டங்களுக்கு தமிழக அரசுக்கு நிதி வழங்க முடியும் என்று ஒன்றிய அரசு நிபந்தனை விதித்த காரணத்தினால் சொத்துவரி உயர்வு தவிர்க்க முடியாதது என தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது . தமிழ்நாடு நகராட்சி களின் சட்டப்படி அந்தந்த நகராட்சி , மாநகராட்சிகளில் உள்ள சொத்துக்களுக்கு வரியை உயர்த்துவதும் குறைப்பதும் அந்தந்த நகராட்சிகள் மாநகராட்சிகள்தான் தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றதாகும் . கடந்த 2 வருடங்களாக கொரானா ஊரடங்கில் மக்கள் வருமானம் பற்றாகுறையில் இருந்த நிலையில் தற்போதுதான் ஊரடங்கு இல்லாமல் மக்கள் சிறிது நிம்மதி பெருமூச்சுவிட்டு கொண்டிருக்கிறார்கள் . இந்த நிலையிலும் தினந்தோறும் ஏறிவரும் பெட்ரோல் , டீசல் , சமையல் எரிவாயு , சமையல் எண்ணை , சிமெண்ட் , கம்பி , மணல் , போன்றவைகளின் விலை உயர்வு அதிகரித்து வரும் நிலையில் நடுத்தர மக்களை பாதிக்கும் வரலாறு காணாத சொத்துவரி உயர்வை தமிழக அரசு சிறிது காலத்திற்க்கு நிறுத்திவைக்க வேண்டுகிறேன் . மேலும் சொத்து வரி உயர்வை பாதியாக குறைத்து அறிவிக்கவேண்டுமென மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் கோரிக்கை விடுத்துள்ளார்.