திருச்சி மாவட்ட 9 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று தருவோம் என திமுக முதன்மை செயலாளர் கே என் நேரு கூறியிருந்தார். அதன்படி திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்று திருச்சியை கைப்பற்றியுள்ளது. சொன்னதை செய்து காட்டிய கே என் நேரு.
திருச்சி மேற்கு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.என்.நேரு 1,12,515 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.
திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியின் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதயராஜ் 94,302 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.
திருவரம்பூர் தொகுதியில் திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 1,05,424 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.
ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் பழனியாண்டி 1,13,539 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.
லால்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் சௌந்தரபாண்டியன் 84,914 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.
மண்ணச்சநல்லூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிரவன் 1,14,071 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.
முசிறி தொகுதியில் திமுக வேட்பாளர் காடுவெட்டி தியாகராஜன் 90,624 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். வெற்றி
துறையூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஸ்டாலின் குமார் 87,786 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.
மணப்பாறை தொகுதியில் திமுக கூட்டணி கட்சியான மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் அப்துல்சமது 95,931 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.
Facebook
WhatsApp
Email
Messenger