திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்தில் ஜனநாயக சமூகநலக் கூட்டமைப்பு சார்பில் பழைய ஆவின் பால்பண்ணை பஸ் நிறுத்தம் அருகில் பொது கழிப்பிடம் கட்டித்தர கோரி மண்டல ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
அரியமங்கலம் பழைய பால்பண்ணை பேருந்து நிறுத்தத்தில் இருந்து சேலம் நாமக்கல் செல்லும் பயணிகள் எச் பி பெட்ரோல் பங்க் வாசலில் காத்து நிற்கின்றனர் அதேபோல் சென்னையில் இருந்து திருச்சி வரும் பயணிகள் எதிர்ப்புறத்தில் இறங்குகின்றனர். திருச்சியிலிருந்து தஞ்சை வழியாக குடந்தை மயிலாடுதுறை திருவாரூர் வேளாங்கண்ணி நாகூர் காரைக்கால் சிதம்பரம் மன்னார்குடி பட்டுக்கோட்டை செல்லும் பயணிகள் லட்சுமிபுரம் தெரு வாசலில் காத்து நிற்கின்றனர். எதிர்ப்புறத்தில் மற்ற ஊர்களில் இருந்து திருச்சி வரும் பயணிகள் திருச்சி நகரத்திற்குள் செல்ல இறங்குகின்றனர். மேலும் சத்திரம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து வரும் காட்டூர் திருவெறும்பூர் பாய்லர் கல்லணை துவாக்குடி துப்பாக்கி தொழிற்சாலை போன்ற இடங்களுக்குச் செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் 5 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து விதம் மேற்படி பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்கிறது. தினசரி காலை முதல் இரவு வரை சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்ற பால்பண்ணை பேருந்து நிறுத்தத்தில் போதிய கழிப்பிட வசதி இல்லை இதனால் பெண் பயணிகள், வயதானவர்கள் மற்றும் நோயாளிகள் கடும் மன ரீதியான உடல் ரீதியான பிரச்சினைகளுக்கு உள்ளாகின்றனர். எனவே பயணிகள் வசதிக்காக பொது கழிப்பிடம் கட்டித்தர ஏற்பாடு செய்யுமாறு இந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.