ஜார்க்கண்ட் மாநிலம் ரூர்கேலாவில் இருந்து சிறப்பு குட்ஸ் ரயில் மூலம் 20 டன் கொள்ளவு கொண்ட 4 டேங்குகளில் 80 டன் ஆக்ஸிஜன் திருச்சி குட்ஷெட்டிற்கு இன்று வந்து இறங்கியது. இந்நிலையில் இன்று வந்த டேங்குகளின் முகப்பு பகுதி ஒன்றோடொன்று நெருக்கமான அமைப்பில் இருந்ததால் அதனை சிறிய கொள்ளளவு கொண்ட டேங்கர் லாரிகளில் மாற்றி மருத்துவமனைக்கு அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனையடுத்து, அங்கு பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட ஆர்டிவோ பழனிக்குமார் ஆலோசனையின் பேரில், ரயில் மூலம் வந்த டேங்குகளை ராட்சத கிரேன்கள் மூலம் தூக்கி மற்றொரு டேங்கர் லாரி மீது வைத்த பிறகு 10 டன் கொள்ளளவு கொண்ட லாரிகளில் ஆக்ஸிஜன் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த டேங்கர் லாரிகள் மூலமாக திருச்சி அரசு மருத்துவமனை, தஞ்சாவூர் அரசு மருத்துவமனை உள்ளிட்ட 7 இடங்களுக்கு ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டது..