அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க மறைந்த முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் 78 வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில் மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் தலைமையில்

காஜாமலை பகுதி செயலாளர் வாசுதேவன் ஏற்பாட்டில் மேலப்புத்தூர் அருகே உள்ள கெம்ஸ்டவுன் ‘அன்னை இல்லத்தில் ‘ பயிலும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்இளைஞரணி செயலாளர் ரஜினிகாந்த் ஏர்போர்ட் வடக்கு பகுதி செயலாளர் வெங்கட் பிரபு, வட்ட செயலாளர் என்.டி.பலையப்பன், மற்றும் அதிமுக பாஜக கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
