மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் 78 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட கழகம் சார்பில் மாநகர் மாவட்ட கழகச் செயலாளரும் முன்னாள் துணை மேருமான சீனிவாசன் தலைமையில் திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள எம்ஜிஆர் ரவுண்டானாவில் பிரம்மாண்ட அலங்கரிப்போடு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா அவர்களின் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் முன்னாள் எம்பி ரத்தினவேல், ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் கவுன்சிலர் அரவிந்தன், மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் ஜெயஸ்ரீ, வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் முல்லை சுரேஷ், முத்துமாரி, வரகனேரி சசிகுமார் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். முன்னதாக அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் பாலக்கரை பகுதி செயலாளர் ரோஜர் ஏற்பாட்டில் எடத்தெரு பகுதியில் கழக கொடி ஏற்றி புரட்சித்தலைவி திருவுருவ உருவப்படத்திற்கு கழக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து காஜாபேட்டை பகுதி செயலாளர் வாசுதேவன் ஏற்பாட்டில் எடத்திரு எம்ஜிஆர் சிலை அருகே உள்ள புரட்சித்தலைவி திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து காஜா பேட்டை பகுதி 50 ஏ வட்டக் கழகம் சார்பில் வட்ட கழகச் செயலாளர் கல்லுக்குழி மனோஜ் குமார் ஏற்பாட்டில் வைக்கப்பட்டிருந்த புரட்சித்தலைவி அம்மாவின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது தொடர்ந்து ஏர்போர்ட் வடக்கு பகுதி செயலாளர் வெங்கட் பிரபு ஏற்பாட்டில் சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சிலை அருகே உள்ள புரட்சித்தலைவி திரு உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, உறையூர், தில்லைநகர் உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த புரட்சித்தலைவி திருவிழா படத்திற்கு மழை தூவி அஞ்சலி செலுத்தி ஏழை எளிய பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சிகளில் கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரத்தினவேல் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானவர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்