பிரபல இயக்குனர் நெல்சன் திலிப் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ஜெயிலர்.இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசை அமைத்துள்ள இந்த படத்தில் சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெரப் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதுடன் சமூக வலைதளங்களிலும் வைரல் ஆகி வந்தது. அதேபோல் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றதுடன் டிக்கெட் முன்பதிவிலும் சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில் உலகம் முழுவதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் இன்று காலை முதல் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக திருச்சியில் உள்ள சோனா மீனா திரையரங்கில் ரஜினிகாந்த் ஜெய்லர் படம் திரைடப்பட்டது.

முன்னதாக திரையரங்கு முன்பு வைக்கப்பட்டிருந்த ரஜினிகாந்தின் படத்திற்கு அவரது ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்து வெடி வெடித்து மேளதாளத்துடன் நடனமாடி உற்சாகமாக கொண்டாடினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்