சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் 135 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்கம் சார்பில் திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா பகுதியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் திரு உருவ சிலைக்கு திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்க தலைவர் கணேசன் தலைமையில் வழக்கறிஞர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்க செயலாளர் முத்துமாரி, துணைத் தலைவர் வடிவேல்சாமி, இணை செயலாளர் விக்னேஷ், வழக்கறிஞர்கள் புவனேஸ்வரி, சேது மாதவன், மூத்த வழக்கறிஞர் சீனிவாசன், வழக்கறிஞர் பாஸ்கர் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.