திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மாநகராட்சி துணை மேயர் திவ்யா மாற்றும் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்களுக்கு தெரியாமல் டெண்டர் விடப்பட்டதாகவும் முறையாக நோட்டிஸ் விடாமல் டெண்டர் விடப்பட்டதாகவும், 57 வது வார்டு மாமன்ற உறுப்பினர் முத்துசெல்வம் மாநகராட்சி மேயரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் மாமன்ற கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.