தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன் கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட பெண் காவலர் சபியாவின் படுகொலையை கண்டித்து நதர்ஷா பள்ளிவாசல் முன்பாக திருச்சி மாவட்ட தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு சார்பாக மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் சபியா படுகொலையை கண்டும் காணாமல் இருக்கும் ஒன்றிய அரசை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.
ஒன்றிய அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து பெண்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாக உள்ளது. இதற்கு முன்பும் இதுபோல் நிறைய சம்பவங்கள் நடந்தேறி இருக்கிறது, ஆனால் குற்றாவாளிகளை கைது செய்யாமல் காப்பாற்றி வரும் ஒன்றிய அரசின் நடவடிக்கையால் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடந்தேறி வருகிறது என்றும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்து அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
மாவட்ட செயலாளர் சம்சுதீன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாநில செயலாளர் ஆல்ஃபா நசீர், நிர்வாகிகள் நிசார் அகமது, அரியமங்கலம் முஸ்தபா, சாஹித், சித்திக், வரகனேரி அசார் ஆகியோர் கலந்து கொண்டனர் இதில் மாநில பேச்சாளர் இம்ரான்கான் மெத்தனமாக செயல்படும் ஒன்றிய அரசை கண்டித்தும் சபியா கொலை வழக்கில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை கைது செய்து தூக்கிலிட ஒன்றிய அரசை வலியுறுத்தியும் பேசினார். இறுதியாக அரியமங்கலம் முஸ்தபா நன்றியுரையாற்றினார்.