டெல்லி ஜந்தர் மந்தரில் போராடி வரும் முன்னாள் இராணுவ வீரர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திருச்சியில் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ராணுவ வீரர்களின் கேண்டீன் அருகே மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மேஜர் சரவணன் நினைவு துணுக்கு மரியாதை செலுத்தி அங்கே இருந்து பேரணியாக சென்று மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தனர்.

 

முன்னாள் ராணுவ வீரர்களின் கோரிக்கைகளாக:- OROP (One Rank One Pension) 26 e G உள்ள குறைகளை சரி செய்யவேண்டும். 7-வது ஊதியக்குழு அமல்படுத்திய MSP-யில் (Military Service Pay) உள்ள ஏற்ற தாழ்வுகளை சமன்படுத்த வேண்டும். ECHS (Ex Servicemen Contribution Health Scheme) இன்சூரன்ஸ் மருத்துவ நிதியை நிலுவை இல்லாமல் வழங்கவேண்டும். 8-வது ஊதியக்குழுவை அமைக்கவேண்டும். வீரமங்கையர்களின் (Family Pension) பேமிலி பென்சனில் உள்ள குறையை சரி செய்யவேண்டும். பணிக்காலத்தில் உடல் ஊனமுற்று வந்த ஊய்வூதியதாரரின் Medical Category பென்சனை சமன்படுத்தவேண்டும்.

அனைத்து மாவட்டத்திலும் CSD, ECHS அமைத்திடவேண்டும். அனைத்து மாவட்டத்திலும் முன்னாள் படைவீரர் நல இயக்கம் அலுவலகம் அமைத்திடவேண்டும்.10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில பொறுப்பாளர்களும், மண்டலத் தலைவர்களும், மாவட்ட நிர்வாகிகளும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட முன்னாள் படைவீரர்களும், வீரமங்கைகளும் மத்திய அரசுக்கு தாங்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க திருச்சி மத்திய பேருந்து நிலையம் ராணுவ பயிற்சி மைய அருகில் இருந்து பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *