திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் இன்று ஓயாமாரி சுடுகாடு மற்றும் தகன மேடையை ஆய்வு செய்து பார்வையிட்டார்.மேலும் இந்த கொடிய கொரோனா நோய் தொற்று காலத்தில் இங்கு சிறப்பாக பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


அந்த கோரிக்கையில் தற்போது கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்கள் தகனம் செய்வதற்காக இங்கு வருகிறது. மேலும் இயற்கையாய் மரணம் அடைந்தவர்களின் உடல்களும் இங்கு வருகிறது. தற்போது இந்த தகன மேடையில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் உடல்களை தகனம் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது மேலும் இங்கு பொதுக்கழிப்பிடம் கட்டிதருமாறு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து உடனடியாக கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் அதிகாரிகளை அழைத்து நடமாடும் கழிப்பிடம் அமைக்க உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது பகுதி செயலாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்