தமிழகத்தில் நிலவி வந்த தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக திருச்சியில் கடந்த ஒரு வாரமாக தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று திருச்சி மாவட்டத்திற்கு 14300 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி வரவழைக்கப்பட்டு இன்று முதல் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் டிவிஎஸ் டோல்கேட் அருகே இன்று காலை தடுப்பூசி செலுத்துவதற்காக அதிகாலை 5 மணி முதல் பொதுமக்களுக்கு டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது. தற்போது திருச்சி மாவட்டத்திற்கு குறைந்த அளவிலேயே தடுப்பூசிகள் வந்துள்ளதால் இங்கு 500 டன் மட்டுமே வினியோகம் செய்யப்பட்டது காலை5 மணி முதல் 5.30 வரை காத்திருந்த பொதுமக்களுக்கு 500 டோக்கன்கள் வழங்கப்பட்டதால் 6 மணிக்கு மேல் தடுப்பூசி செலுத்துவதற்காக வந்த பொதுமக்களிடம் மருத்துவர்கள் இன்று தடுப்பூசி இல்லாததால் நாளை வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு அறிவுறித்தினர். இதனால் அங்கு இருந்த பொதுமக்கள் கலைந்து செல்லாமல் இருக்கையில் அமர்ந்து இருந்தனர். இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் அவர்களை விரட்டி அடித்தனர். இதனையடுத்து காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கூடுதலாக தடுப்பூசிகள் கொண்டு வரப்பட்டு வந்த அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது
Facebook
WhatsApp
Email
Messenger
Post navigation