திருச்சி காந்தி மார்க்கெட் முகமது அலி ஜின்னா தெருவில் உள்ள குடோனில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்குகள் மற்றும் பிளாஸ்டிக் கப்புகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக திருச்சி காந்தி மார்க்கெட் போலீசார் கொடுத்த தகவலின்பேரில் மாநகர உதவி ஆணையர் கமலக்கண்ணன் உத்தரவின்பேரில் திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்டம் சுகாதார ஆய்வாளர் டேவிட் முத்துராஜ் தலைமயில் அதிரடி ஆய்வு மேற்கொள்ளபட்டது.
அப்போது குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடைசெய்யப்பட்ட சுமார் 50 ஆயிரம் மதிப்புள்ள கேரி பேக்குகள் பேப்பர் கப்புகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த மாநகராட்சி அதிகாரிகள் குடோன் உரிமையாளருக்கு ரூபாய் 50 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் தடைசெய்யப்பட்ட கேரி பேக்குகள் பேப்பர் கப்புகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.