பொது துறை பொது இன்சூரன்ஸ் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் நலச் சங்கங்களின் திருச்சி – புதுகை – கரூர் – பெரம்பலூர் மாவட்ட கூட்டு குழு சார்பில் திருச்சி கண்டோன்மெண்ட் தலைமை அலுவலகம் முன்பு வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது.அதன் படி டெல்லியில் டிசம்பர் 21ஆம் தேதி அன்று நடைபெற்ற அனைத்து தொழிற் சங்கங்களின் கூட்டு போராட்ட குழு ( JFTU ) எடுத்த முடிவின் அடிப்படையில் பொது இன்சூரன்ஸ் துறையில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களின் ஒரு பகுதியாக இன்று ஜனவரி 28 அன்று ஒரு நாள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளாக ஆகஸ்ட் 2017 முதல் வழங்கப்பட வேண்டிய ஊதிய திருத்தம் 53 மாதங்களாக எவ்வித காரணமும் இன்றி தாமதப்படுத்தப்படுகிறது . குடும்ப ஓய்வுதியத்தில் முன்னேற்றம் , புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்தல் , 1945 வருடத்திய பென்சன் திட்டத்தில் இணைப்பு , உடனடியாக ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை துவக்கம் போன்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஒரு நாள் வேலை நிறுத்தம் நடைபெற்றது . கம் . யுனைடெட் இந்திய இன்சூரன்ஸ் கம் . லிமிட் , நேஷனல் இன்சூரன்ஸ் கம் . லிமிட் . , நியூ இந்தியா லிமிட் . , ஓரியண்டல் இன்சூரன்ஸ் அஸ்ஸூரன்ஸ் கம் . லிமிட் , போன்ற அரசு துறை நிறுவனங்களை முழுமையாக தனியார் மயமாக்கும் முயற்சியை ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது .
எனவே அரசின் தனியார்மய முயற்சியை கைவிட வலியுறுத்தியும் , நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள ஊதிய உயர்வு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் நடைபெற்றது . அதிகாரிகள் உள்ளிட்ட 100 சதவீத ஊழியர்கள் இவ்வேலை நிறுத்தத்தில் நாடு முழுவதும் சுமார் 50,000 பேர் பங்கு பெற்றனர் . நேஷனல் இன்சூரன்ஸ் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் ஸ்ரீதரன் தலைமை தாங்கினார் , யுனைடெட் இந்திய இன்சூரன்ஸ் அதிகாரிகள் நீலகண்டன், ஜான் , NFGIEA , செந்தில் , SC / ST நல சங்கம் பரிசாத் முத்துகுமரன் , செயலர் MRGIEA ராஜன் , மண்டல இணை செயலர் , MRGIEA ராஜமகேந்திரன் , துணை தலைவர் MRGIEA . மணிவேல் , செயராமன் , தலைவர் , ஓய்வூதியர் சங்கம் போன்ற தலைவர்களும் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள் .