திருச்சி பொன்மலைபட்டி வடக்குத் தெருவை சேர்ந்த டென்சிங் பெர்னாட் என்பவர் இன்று காலை திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதனைத் தொடர்ந்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வட்டம் கீழக்குறிச்சி கிராமத்தில் நானும் எனது நண்பன் கண்ணன் என்பவர் சேர்ந்து இடம் ஒன்றை கடந்த ஆண்டு கிரையம் செய்தோம்‌. மேலும் அந்த இடத்தில் பழைய பாலடைந்த ஒரு கட்டிடம் இடிந்து சுவர் மட்டும் விழக்கூடிய சூழ்நிலையில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் இருந்ததால் அதனை எடுத்து அப்புறப்படுத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கண்ணன் தொடர்ந்த வழக்கில் கடந்த மூன்றாம் தேதி திருவரம்பூர் வட்டாட்சியர் பரிசீலனை செய்து அந்த இடிந்த சுவரை இடிக்க உத்தரவு வழங்கினார். அந்த உத்தரவின் பேரில் காவல்துறை அனுமதியுடன் கடந்த 12 ஆம் தேதி சுவர் இடிக்கப்பட்டு இடத்தை சுத்தம் செய்தோம்.

இந்நிலையில் சாமானிய மக்கள் நல கட்சியை சேர்ந்த ஜோசப் மற்றும் அவருடன் சிலர் எங்களிடத்தில் எங்கள் போட்டோ ஆதார் கார்டை போட்டு மிகவும் இழிவாக சித்தரித்து பதாகை ஒன்றை வைத்துள்ளனர். மேலும் என்னிடம் பதாகையை எடுக்க வேண்டும் என்றால் எங்களுக்கு 30 லட்சம் இரண்டு நாட்களில் தர வேண்டும் என மிரட்டி விட்டு சென்றனர். மேலும் பணம் தராததால் இந்த இடம் ராணி மங்கம்மாள் மண்டபம் என்றும் எங்கள் இடத்தை புறம்போக்கு இடம் என்றும் தவறான அவதூறுகளை மக்களிடம் பரப்பி பொய்யான செய்திகளை சில அமைப்புகளையும் சங்கங்களையும் கையில் வைத்துக் கொண்டு போராட்டம் நடத்தினர் மேலும் எங்களது போட்டோவை சமூக வலைதளங்களில் பதிவு செய்து தொடர்ந்து என்னை இழிவு படுத்தி வருகின்றனர் எனவே ஜோசப் மற்றும் அவருடன் இருந்த சில பேர் மீது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளிக்க வந்ததாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *