தமிழக லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) சார்பில் மாநில நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் திருச்சி அருண் ஹோட்டல் கூட்ட அரங்கில் மாநிலத் தலைவர் வித்யாதரன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில பொதுச் செயலாளர் சுப்பிரமணி வரவேற்புரை ஆற்றினார். மாநில தலைமைச் செயலாளர் பிரபாகரன் மூத்த துணைத்தலைவர் நம்பியார் மாநில பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த மாநில செயற்குழு கூட்டத்திற்கு தமிழகத்திலிருந்து மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:- லோக் ஜன சக்தி கட்சியின் நிறுவனத் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வானின் மறைவிற்குப் பிறகு தலைவரான சிராக் பாஸ்வான் எம் பி அவர்களை செயற்குழு வாழ்த்தி அவருக்கு உறுதுணையாக இருப்போம் என்று உறுதியளிக்கிறது. மேலும் 40 ஆண்டுகாலம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து மக்களுக்கு செம்மையான சேவைகளை வழங்கி மறைந்த சமூக நீதி காவலர் ராம் விலாஸ் பாஸ்வான் அவர்களுக்கு தமிழ்நாட்டில் முழு உருவ வெண்கல திருவுருவ சிலை அமைக்க வேண்டும் என தமிழக முதல்வரிடம் பாரத ரத்னா விருதை ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என இந்த செயற்குழு வேண்டுகோள் வைக்கிறது. மேலும் பட்டியல் இன பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு தனியார் துறையில் உள்ள நிறுவனங்களில் இட ஒதுக்கீடு நடைமுறையை கொண்டு வர வேண்டும் என ஒன்றிய அரசை செயற்குழு வலியுறுத்துகிறது.
அரசுகளால் நடத்தப்படும் தேர்வுகளில் தேர்வான பிறகும் உயர்கல்விக்கு செல்லும் போது நுழைவுத் தேர்வு முறையால் ஏற்படுகின்ற பாதிப்புகளை உயிரிழப்புகளை தவிர்க்கும் வகையில் உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வு ரத்து செய்ய வேண்டும். கல்வி எல்லாம் மாநில மாணவர்களுக்கும் சிறப்பாக பயில ஏதுவாக கல்வியை ஒன்றிய அரசு பட்டியலில் இருந்து மாநில பட்டியலில் சேர்க்க ஒன்றிய அரசை செயற்குழு வலியுறுத்துகிறது. என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது