திருச்சி மாவட்டம், ராம்ஜிநகரில் ஸ்ரீ உமா பரமேஸ்வரி பஞ்சாலை இயங்கி வந்தது இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்தனர். பஞ்சாலையில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக அந்த பஞ்சாலையை வங்கி நிர்வாகம் அந்நிறுவனத்தை முடக்கியது. இதனை தொடர்ந்து வேறொரு நிறுவனம் அந்த பஞ்சாலையை ஏலத்திற்கு எடுத்த பின்னர் அங்குள்ள தொழிலாளர்கள் வேலை இருந்து நீக்கப்பட்டனர். ஆனால் நீக்கப்பட்ட அந்த நிறுவனம் பணியாற்றிய ஊழியர்களுக்கான பண பலன்களை 15 வருடத்திற்கு மேலாக வழங்காமல் இழுத்தடித்து வருகிறது. இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டும், உரிய அதிகாரிகளும் சந்தித்தும் எந்த தீர்வு எட்டப்படவில்லை. இந்நிலையில் ஸ்ரீ உமா பரமேஸ்வரி பஞ்சாலை நிறுவனத்தில் பணி செய்த சுமார் 880க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் பணிக்கொடை மற்றும் வருங்கால வைப்பு நிதியை உடனே வழங்க வேண்டும், தொழிலாளருக்கு சேர வேண்டிய ரூபாய் 15கோடியை பெற்றுத்தராமல் காலம் தாழ்த்தி வரும் கலைத்தல் அதிகாரி மற்றும் ஃபோனிக்ஸ் ஜே.ஆர்.சி பிரைவேட் லிமிடெட் மற்றும் அரசு வருங்கால வைப்பு நிதி நிறுவன அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,
வேலைகளை இழந்து வறுமையில் வாழ்ந்து வரும் தொழிலாளர்களின் வாழ்வை பாதுகாக்க மாவட்ட ஆட்சித் தலைமையில் உடனடியாக அதிகாரியை சைனிக்ஸ் ஏ.ஆர்.சி பிரைவேட் லிமிடெட் தனியார் நிறுவனம் மற்றும் அரசு வருங்கால வைப்பினை நிர்வாக உயர் அதிகாரி உள்ளடக்கிய முத்தரப்பு பேச்சு வார்த்தையை உடனே நடத்த வலியுறுத்தியும் திருச்சி மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் ஐஎன்டியுசி கூட்டு இயக்கங்கள் இணைந்து ராம்ஜிநகரில் ஐ.என்.டி.யு.சி, தலைவர் ஜெம்புநாதன் தலைமையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர மேற்கு மாவட்ட செயலாளர் புல்லட் லாரன்ஸ், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் சக்திஆற்றலரசு ஆகியோர் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் ராம்ஜி நகர் பேருந்து நிறுத்தம் பகுதியில் நடைபெற்றது. கண்டன உரையை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில துணைச் செயலாளர், மாமன்ற உறுப்பினர் பிரபாகரன் மற்றும் திருச்சி பாராளுமன்ற செயலாளர் தங்கதுரை ஆகியோர் வழங்கினர். ஆர்ப்பாட்டத்தில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக திருச்சி யில் செயல்படும் வைப்பு நிதி அலுவலகத்தை முற்றுகையிடுவது மேலும், பெரிய அளவில் சாலை மறியல் மற்றும் போராட்டத்தை மேற்கொள்வது என தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கிழக்கு மாநகர மாவட்ட செயலாளர் கனியமுதன், கிழக்கு மாவட்ட செயலாளர் குருஅன்புச்செல்வன், இஸ்லாமிய சனநாயக பேரவையின் மாநில துணைச் செயலாளர்கள் அஷ்ரப் அலி, புரோஸ்கான், வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி வழக்கறிஞர் பழனியப்பன், மற்றும் ஐஎன்டியுசியின் நிர்வாகிகள் களஞ்சியம், கல்யாண்குமார்,வெங்கட் மற்றும் ஸ்ரீ உமா பரமேஸ்வரி பஞ்சு மில் ஆலையில் பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் 200க்கு மேற்பட்டோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். கோரிக்கை ஆர்ப்பாட்டத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருச்சி மேற்கு மாவட்ட, காஜாமலை பகுதி துணைச் செயலாளரும் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளருமான சந்திரமோகன் ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்தார்.