திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கூத்தூர் ஊராட்சியில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணிகள் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் நடைப்பெற்றது. இந்த ஆய்வில் பள்ளி கல்வித்துறை, வட்டாரப் போக்குவரத்து துறை, தீயணைப்பு துறை, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தீயணைப்பு துறை சார்பில் தீ தடுப்பு ஒத்திகை, விபத்திலிருந்து எப்படி காப்பாற்றுவது,மீட்பு பணிகள் குறித்து செய்முறை விளக்கம் அளித்தனர். வாழ்வில் திருச்சி கிழக்கு மேற்கு திருவரம்பூர் ஸ்ரீரங்கம் லால்குடி மணப்பாறை உள்ளிட்ட பகுதியிலிருந்து 604 பள்ளி வாகனங்கள் பங்குப் பெற்றன. வாகனத்தில் முதலுதவிப் பெட்டி, தீ தடுப்பான், அவசர வழி கதவு, கேமரா ,ஜிபிஎஸ் கருவி உள்ளிட்டவை பள்ளி வாகனங்களில் உள்ளதா என ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் 420 வாகனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது. 70 வாகனங்கள் குறைபாடுகளை சரிசெய்ய அனுமதி அளித்தனர்.27 வாகனங்கள் நிராகரிக்கப்பட்டது. லால்குடி ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் ஓட்டுநர் நடத்தினார்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆய்வுப்பணியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் பங்கேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
பள்ளி வாகனங்களில் அதிகளவு குழந்தைகளை ஏற்றும் வாகனங்களை கண்காணிக்கப்படும். இப் பகுதியில் மாட்டு வண்டி மற்றும் மணல் லாரிகளால் காலை நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க விரைவில் நேரக்கட்டுப்பாடு விதிக்கப்படும்.