தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சரும் திமுக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், திருச்சி தெற்கு மாவட்ட திமுகவில் திருவெரம்பூர் மணப்பாறை திருச்சி கிழக்கு ஆகிய மூன்று தொகுதிகள் உள்ளது. அந்த மூன்று தொகுதிகளிலும் 871 வாக்குச்சாவடிகள் உள்ளது. அந்த வாக்குச்சாவடிகள் நேரடியாக சென்று மக்களிடம் திமுக அரசின் திட்டங்கள் எடுத்து கூறுவது, ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு செய்து வரும் வஞ்சகங்களை எடுத்து கூறுவது அதன் மூலம் ஓரணியில் தமிழ்நாடு என்கிற இந்த திட்டத்தில் மக்களை இணைப்பது மேற்கொள்ள உள்ளோம்.

மண் மொழி மானம் காக்க தான் ஓரணியில் தமிழ்நாடு என்பது செயல்படுத்தப்பட உள்ளது. ஒன்றிய அரசின் மூலமாக வஞ்சிக்கப்படுகிறோம் என மக்களிடம் எடுத்து கூறுவோம். தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய கல்வி நிதி வழங்கப்படவில்லை, RTE நிதி வழங்கப்படாமல் உள்ளது. இது போன்றவற்றை மக்களிடம் எடுத்து கூறுவோம்.

 எதிர்கட்சியினர் வீடுகளாக இருந்தாலும் அவர்கள் வீட்டிற்கு சென்று அவர்களையும் சந்திப்போம். வாக்குச்சாவடியில் எவ்வளவு பேர் இருந்தாலும் அனைவரின் வீட்டிற்கும் செல்லவிருக்கிறோம். ஓரணியில் தமிழர்களாக இணைப்பது தான் முதல் இலக்கு, இரண்டாவது தான் விருப்பபட்டவர்களை கட்சியில் சேர்ப்பது. 18 முதல் 25 வயதுள்ள இளைஞர்களை சந்தித்து அவர்களுக்கு புரியும்படி பக்குவமாக திமுக அரசின் சாதனைகளை எடுத்து கூறுவோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்