திருச்சி சரக சிறைகள் மற்றும் சீர்திருத்த துறை துணைத் தலைவர் கனகராஜ் அவரின் வழிகாட்டுதலின்படி, திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் முன்னிலையில் திருச்சி மத்திய சிறையில் உள்ள அனைவருக்கும் கொரானா தடுப்பூசி 100% செலுத்தப்பட்டுள்ளது.
திருச்சி மத்திய சிறை துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது.
தமிழக அரசின் கொரனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக நிறைவேற்றிடும் விதமாக திருச்சி மத்தியசிறையில் இன்று 19.06.2021 சிறைவாசிகள் மற்றும் சிறை களப்பணியாளர்கள் மற்றும் பணியாளர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு கொரனா தடுப்பூசி மருத்துவ முகாம் நடத்தப்பட்டது . இதில் 468 சிறைவாசிகளுக்கு சிறையின் உள்ளே சிறை மருத்துவமனையிலும் , திருச்சி மத்தியசிறை களப்பணியாளர்கள் மற்றும் பணியாளர்களது குடும்ப உறுப்பினர்கள் 110 நபர்களுக்கு சிறை வளாக குடியிருப்பில் நடைபெற்ற மருத்துவ முகாமிலும் கொரனா தடுப்பூசி செலுத்தப்பட்டது . இதுவரை திருச்சி மத்திய சிறையில் 1290 சிறைவாசிகளுக்கும் , 365 சிறை களப்பணியாளர்களுக்கும் கொரனா தடுப்பூசி செலுத்தப்பட்டு தமிழக சிறைகளிலேயே அனைத்து சிறைபணியாளர்கள் மற்றும் சிறையில் உள்ள சிறைவாசிகளுக்கும் கொரனா தடுப்பூசி செலுத்தப்பட்டு 100 சதவீதம் இலக்கை எட்டிய முதல் மத்திய சிறையாக திருச்சி மத்தியசிறை உள்ளது .