தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைவரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில முதன்மை துணைத் தலைவருமான எம். அப்துல்ரஹ்மான் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.
அப்பொழுது அவர் கூறுகையில்:-
வக்பு வாரிய சொத்துக்கள் ஆக்கிரமிப்பு பல இடங்களில் செய்யப்பட்டுள்ளது. போலி ஆவணங்கள் மூலம் சொத்துக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது, அதனை மீட்கும் பணியில் தற்போது ஒன்றினைந்து ஈடுபட்டு வருகிறோம்.
அரசியல் தலையீடு இன்றி அனைத்து செயல்பாடுகளும் நடைபெற்று வருகிறது. வக்பு வாரிய அலுவலர் தேர்வு நடைபெறுகிறது, இது வரை 8000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது, முறையாக தேர்வு நடத்தப்பட்டு தகுதியின் அடிப்படையில் பணி அமர்த்தப்படுவார்கள்.
தமிழகத்தில் வக்பு வாரியத்திற்கு கீழ் 11 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு அதிகாரிகள் நியமனம் செய்யப்படுவார்கள் – அவர்கள் வக்பு வாரிய புகார்கள் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவித்தார்.