இன்று கிருஷ்ண ஜெயந்தி விழா உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக திருச்சி அரியமங்கலம் நேருஜி நகர், ஜோசப் கிருஷ்ணன் 2-வது தெருவில் வசிக்கும் பொதுமக்கள் பள்ளிக் குழந்தைகளுடன் இணைந்து இன்று கிருஷ்ண ஜெயந்தி விழாவை வெகு விமர்சையாக கொண்டாடினர். இதற்காக அப்பகுதியில் உள்ள 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கிருஷ்ணர் வேடம், ராதை வேடம் அணிவித்து பொதுமக்கள் மத்தியில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

ராதை, ஸ்ரீ கிருஷ்ணர் வேடத்துடன் மாஸ்க் அணிந்த குழந்தைகள் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று கொரோனா தடுப்பு நடவடிக்கையில் முன் கள பணியாளர்களே கடவுள் என்பதை பிரதிபலிக்கும் விதமாக பதாகைகளை ஏந்தியவாறு சென்று, முக கவசம் அணிவது, கிருமி நாசினி பயன்படுத்துவது, தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் அப்பகுதி மக்களுக்கு இலவசமாக முககவசங்களை வழங்கியும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையின் முன் களப்பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், மாநகராட்சி பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்டோரை கௌரவிக்கும் விதமாக,

ஸ்ரீ கிருஷ்ணர் வேடம் அணிந்த குழந்தைகள் தங்கள் கைகளில் பதாகைகளை ஏந்திச் சென்றனர். குழந்தைகள் கிருஷ்ணர் வேடமணிந்து வீடுகள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தியது அப்பகுதி மக்களிடையே வரவேற்பைப் பெற்றது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்