எஸ்டிபிஐ கட்சியின் ஒரு அங்கமான விமன் இந்தியா மூவ்மெண்ட் அமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் இன்று மாநில தலைவர் பாத்திமா கனி தலைமையில் திருச்சி பாலக்கரையில் உள்ள எஸ்டி பிஐ கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது, மாநிலத் துணைத் தலைவராக டாக்டர் ஜெமிலுனிஷாவும், மாநில செயலாளராக மெஹராஜ் ஆகிய இருவரும் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த செயற்குழு கூட்டத்தில் சிறப்புஅழைப்பாளராக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் பங்கேற்று ஆலோசனை வழங்கியதுடன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்… தமிழகம் பெண்கள் வாழ்வதற்கு ஏற்ற மாநிலமாக இல்லை, அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு முழுமையான நீதி வழங்கவில்லை, யார் அந்த சார்? என்ற கேள்விக்கு விடை கிடைக்கவில்லை… தமிழகத்தில் வாழும் பெண்களுக்கு போதுமான பாதுகாப்பை வழங்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது, என்ன தமிழக அரசு சரியாக செய்திட வேண்டும். தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தை தொடர்ந்து கடந்த இரண்டு மாதத்தில் பல்வேறு பாலியல் சம்பவங்கள் நடைபெற்று வருவது தொடர்கதையாகி வருகிறது, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் கடமையிலிருந்து தமிழக அரசு தவறிவிட்டது. புதுக்கோட்டையில் சமூக அலுவலர் ஜகபர் அலி மணல் மாபியாக்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளது என்பது மேலும் சட்டம்ஒழுங்கை கேள்விக்குறியாக்கும் நிலையில் உள்ளது, சாதாரண வழக்குகளுக்கு இந்தியாவின் நாலாபுரம் சென்று கைதுசெய்யும் காவல்துறை தற்போது கைகட்டி நிற்பதுடன் இதுபோன்ற வழக்குகளை மூடிமறைக்க பார்க்கிறது, மணல் மாபியா மற்றும் கல்குவாரி குற்றவாளிகளை கைதுசெய்ய வேண்டும், சமூக ஆர்வலர்களை பாதுகாக்க அரசு தனிசட்டம் இயற்றவேண்டும் இறந்து போனவர் குடும்பத்தினர் ஒருவருக்கு அரசுவேலை மற்றும் 50 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும்.

வேங்கை வயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவசரகதியில், பாதிக்கப்பட்ட உயர் நீதிமன்றம் அறிக்கை கேட்டதை காரணம் காட்டி பாதிக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த 3 பேரை குற்றவாளியாக நிறுத்துவது என்ன நியாயம், 2000ம் ஆண்டு திமுக ஆட்சியில் பள்ளிவாசலில் நுழைந்து வெடிகுண்டுவீசி கொல்லப்பட்ட அப்துல் ரஷீத் படுகொலையில், காதல் விவகாரத்தில் அவரது மகனே குண்டு வீசி கொன்றார் என ஒரு சமூகத்தை குற்ற பரம்பரையாக குற்றம் சாட்டியது போல தற்போது புதுக்கோட்டையிலும் அதை நிலையை திமுக மேற்கொள்கிறது. தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்ற அறிக்கையை நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும், மேல் விசாரணை நடத்தப்பட வேண்டும், மேலும் சிபிஐக்கு மாற்றம்செய்து உண்மையான குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும், வக்பு திருத்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டு அதனை எப்படியாவது கொண்டுவர பாஜக முயல்கிறது, வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மாநாடு மற்றும் போராட்டம் நடத்தப் போவதாகவும் தெரிவித்தார்.ராமஜெயம் கொலை வழக்கு உள்ளிட்ட சிபிசிஐடி கைவசம் உள்ள எந்த வழக்குகளிலும் சரியாக செயல்படவில்லை, வேங்கை வயல் சம்பவம் மூலம் சிபிசிஐடி மீதான நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது எனவே, வேங்கைவயல் சம்பவத்தில் உயர்நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடத்தப்பட்டு, உண்மையா குற்றவாளி தண்டிக்கப்படவேண்டும்.

பொது சமூகத்தின் மனசாட்சியை திருப்திப்படுத்தும் விதமாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இதுபோன்று ஆடியோ மற்றும் பல்வேறு தகவல்களை காவல்துறை வெளியிட்டுவருகிறது, நீதிபதி சத்யநாராயணா குழுவும் சிபிசிஐடி உரிய விசாரணை மேற்கொள்ளவில்லை என்கிறது, அதேபோன்று வழக்கறிஞர் பவானியப்பா மோகன் சிபிசிஐடி மூலம் மிரட்டப்படுகிறார் என்பதையும் குறிப்பிட்டுள்ளார், எனவேதான் இந்த வழக்கில் சிபிசிஐடி முறையாக வழக்கை நடத்தவில்லை என்பதனால், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். வேங்கை வயல் விவகாரத்திலும், ஜகபர் அலி படுகொலை விவகாரத்திலும் நீதிமன்றத்தில் எஸ்டிபிஐ கட்சி உரிய சட்டபோராட்டம் நடத்தும் என்றார். எந்த ஒரு வழக்காக இருந்தாலும் பேசும்பொருளாக இருந்தால் மட்டுமே அதில் தீர்வுகிடைக்கும், அண்ணா பல்கலைக்கழக வழக்கு உயர்நீதிமன்ற பார்வைக்கு உள்ளது எனக்கூறி முடித்துவிட்டனர், எனவே இதில் என்ன நடக்கிறது என்பது தெரியாது. ஆளுகிற திமுகஅரசு செயல்படாத அரசாகவும், ஒரு அறிக்கை அரசாகவுமே உள்ளது, நடப்பவற்றை மூடி மறைத்து விட்டு தேர்தலை எதிர்கொள்ளலாம் என எண்ணுகிறார்கள் ஆனால் தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டு கொண்டு இருக்கிறது, ஆனால் முதல்வர் இதனை கண்டுகொள்ளாமல் புதிது புதிதாக வசனங்களை பேசிக்கொண்டு செல்கிறார், டங்ஸ்டன் விவகாரத்தில் இவ்வளவு அவசரமாக பாராட்டுவிழா நடத்தவேண்டிய தேவை எங்கு உள்ளது என தெரியவில்லை, இதுபோல பரந்தூர் விமான நிலையத்திற்கு ஏன் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி அதனை முடிவுக்கு கொண்டுவரவில்லை.

திருப்பரங்குன்றத்தில் வழிபாட்டு உரிமை முஸ்லிம்களுக்கு உள்ளது, அந்த உரிமையை காவல்துறை பிரச்சினையாக ஏற்படுத்துகிறது. அங்கு ஒரு மதஅரசியலை ஏற்படுத்த நினைக்கிறார்கள், அதற்கு மதுரை காவல்துறையினர் பலியாகிவிட்டனர். அங்கு உணவு உண்ணும் உரிமை இருக்கிற நிலையில் மாமிச உணவை சாப்பிட்டாரா இல்லையா என்பதனை வக்பு போர்டு சேர்மன் நவாஸ்கனிதான் தெரிவிக்கவேண்டும், பாஜகவுடன் அதிமுக மீண்டும் கூட்டணி என்ற பேச்சுக்கே இடம் இல்லை இதைத்தான் அதிமுகவின் பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் தெரிவித்துவருகிறார்… அந்தக் கேள்வியை மீண்டும் மீண்டும் ஏன் கேட்கிறீர்கள் என்றுதான் எடப்பாடியும் தற்போது கேள்வி எழுப்பி வருகிறார்.தமிழகத்தின் பாஜக திமுக என்ற நிலையை பாஜக கொண்டுவர நினைக்கிறது ஆனால் அது நிஜமில்லை, திமுக அதிமுக தான் தமிழகத்தில் இரு துருவ அரசியல் பாஜகவால் தமிழகத்தில் ஒன்றும் சாதிக்கமுடியாது 2026இல் தமிழகத்தில் பாஜக ஒருஇடத்தில்கூட ஜெயிக்கப்போவதில்லை, எந்த அரசியல்முடிவையும் எடுக்கமுடியாத இடத்தில் பிஜேபி 2026ல் இருக்கும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்