திருச்சியில் உள்ள தந்தை பெரியார் அரசு கலை அறிவியல் கல்லூரி 12 வது பட்டமளிப்பு விழா இன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கோவி.செழியன், கலை அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரிகளில் கடந்த ஆண்டை விட மாணவர் சேர்க்கை இந்தாண்டு 25 சதவீதம் அதிகரித்துள்ளது. புதிதாக 15 கலை அறிவியல் கல்லூரிகளில் தொடங்கியுள்ளோம் பாலிடெக்னிக் கல்லூரிகளில் 7புதிய பாடப்பிரிவுகளை அறிமுகம் செய்துள்ளோம் அதிலும் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.

 தமிழ் புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம் போன்ற திட்டங்களால் மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எல்லா நிலைகளிலும் உயர் கல்வியை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்ல முதலமைச்சர் ஆக்கமும் ஊக்கமும் தந்து வருகிறார். முன்பெல்லாம் இந்தியாவிலேயே அதிகம் படித்தவர்கள் உள்ள மாநிலம் எது என்று கேட்டால் கேரளா என்பார்கள் ஆனால் அந்த நிலை மாறி இன்று எல்லோரும் தமிழகம் என கூறுகிறார்கள்.

அதிமுக ஆட்சியில் உயர்கல்விக்கு கொடுத்த முக்கியத்துவத்தால் தான் தற்பொழுது தமிழகத்தில் உயர்கல்வி சிறந்த நிலையில் உள்ளது என எடப்பாடி பழனிச்சாமி கூறுவது பொய் பிரச்சாரம் அவர்கள் ஆட்சியில் இடைநீற்றல் எவ்வளவு ? உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு, உயர்கல்விக்கு எவ்வளவு நிதி ஒதுக்கினார்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் அதனுடைய எண்ணிக்கை எவ்வளவு என்பது குறித்து கணக்கிட்டாலே உண்மையான விவரம் தெரியும். தனிமனித பொருளாதார வளர்ச்சியில் இரட்டை இலக்கத்தை தமிழகம் அடைந்துள்ளது. தமிழக அரசு கூறுவது ஒன்றிய அரசின் தரவுகளின் அடிப்படையில் கூறுகிறார்கள் மாற்று கட்சியினர் கூறுவது பொய் பிரச்சாரம் அது தமிழகத்தில் எடுபடாது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *