திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் அரங்கில் ஆர், எஸ்.பி. மற்றும் யூடியூசியின் மாநில நிர்வாகிகள் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில பொதுச் செயலாளர் சேக்கிழார் தலைமை தாங்கினார். புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜீவானந்தம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வருகிற செப்டம்பர் 1,2 ஆகிய தேதிகளில் சேலத்தில் அகில இந்திய மாநாடு நடைபெற உள்ளதாகவும், அதற்க்கான பணிகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைகளை வழங்கினார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன் கலியமூர்த்தி புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிர்வாகிகள் குழு ஆலோசனைக் கூட்டத்திற்கு ஆர், எஸ்.பி. மற்றும் யூடியூசியின் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜீவானந்தம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் செய்தி பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி உள்ளனர். தமிழகத்தில் பூரண மது விலக்கு கொண்டு வரவேண்டும். தமிழ்நாடு அரசு போதைப்பொருளை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நீட் தேர்வில் குளறுபடிகள் நடைபெற்று உள்ளது அது சம்பந்தமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்,எங்களை பொறுத்தவரை நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். என்பதுதான் எங்கள் கோரிக்கை என தெரிவித்தார்.