தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த தமிழக அரசை வலியுறுத்தி தமிழக ஜனதா தளம் சார்பில் திருச்சி ஜங்ஷன் காதி கிராப்ட் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாவட்ட தலைவர் அறிவழகன் வரவேற்று பேசினார். மாநில துணைத் தலைவர்கள் துரைசாமி, கே.சி. ஆறுமுகம், வழக்கறிஞர்கள் ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் தலைவர் ராஜகோபால், தமிழ்நாடு கால்நடை வளர்ப்பு பாதுகாப்பு சங்கத்தின் மாநிலத் தலைவர் வக்கீல் சரவணன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் சம்பத், கோவிந்தராஜ், சிவசுப்பிரமணியன், நாகராஜன், பால்ராஜ்,சங்கர்,ஜெயமணி, கிருஷ்ணராஜ், ராமகிருஷ்ணன், ராமலட்சுமி செல்லப்பா, இப்ராம்பாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். தமிழகத்தில் போதை பொருட்கள் விற்பனை நடமாட்டத்தை தடுக்க வேண்டும். ஆடு வளர்ப்பு நல வாரியம் அமைக்க வேண்டும் வனத்துறையில் ஆடு மாடுகளை மேய்ச்சலுக்கு அனுமதி அளிக்க வேண்டும். திருடர்களிடமிருந்தும், குண்டர்களிடமிருந்தும்,ஆடு வளர்ப்போர்ரை பாதுகாத்திட தனி சட்டம் இயக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்தில் ஜனதா தளம்தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள், கலந்து கொண்டனர்.