திருச்சி பிஷப் ஹீபர் பள்ளியில் தமிழக பெண்கள் செயற்களம் மற்றும் தமிழக மாணவர்கள் இணைந்து நடத்தும் கலக்க வராங்க தமிழ் பசங்க என்ற போட்டி திருச்சியில் நடைபெற்றது.இந்தப் போட்டியில் தமிழ் கலாச்சாரங்கள் சார்ந்த மயிலாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், தப்பாட்டம், பேச்சு,கவிதை, பாட்டு போட்டிகள் நடைபெற்றன இதில் ஏராளமான பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிகாட்டினர்…
இந்த நிகழ்ச்சி குறித்து தமிழகப் பெண்கள் செயற்களம் திருச்சி செயலாளர் பூங்குழலி கூறுகையில்…
இந்த நிகழ்ச்சியின் நோக்கம் தமிழர்களின் வரலாறு, பண்பாடு, போன்றவற்றை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் அப்போதுதான் அடுத்த தலைமுறையை சிறப்பாக அமைக்க முடியும், தற்போது உள்ள காலகட்டத்தில் சினிமா கலாச்சாரத்தில் மாணவர்கள் அழிந்து வருகிறார்கள் அவர்களை மீட்டெடுப்பதற்காக தான் தற்போது இந்த நிகழ்ச்சிகளை செய்து வருகிறோம்.
இந்த ஆண்டு தஞ்சாவூரில் கண்காட்சி நடைபெற இருக்கிறது அதில் தமிழர்களுடைய கற்காலம் முதல் சங்க காலம் வரை தமிழருடைய சிறப்புகள் மற்றும் உணவுப் பொருட்கள், மருத்துவங்கள், அகழ்வாரசிகள் என அனைத்து கண்டுபிடிப்புகளும் கண்காட்சியாக வைக்கப்படுகிறது. குறிப்பாக மாணவர்களிடையே தமிழ் மண் சார்ந்த கலை நிகழ்ச்சிகளை நடத்தி ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாக தெரிவித்தார்…