சற்று முன் வெளியான தகவலின்படி தமிழக அரசின் தலைமை செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுவரை தலைமைச் செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சன் அவர்கள் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இறையன்பு ஐஏஎஸ் அவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக முக்கியத்துவம் இல்லாத துறையில் இருந்த நிலையில் தற்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். மேலும் இதே போன்று ஐபிஎஸ் அதிகாரிகளும் மாற்றம் ஏற்படும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதுகுறித்து அதிரடி அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.