தமிழக ஆசிரியர் கூட்டணி மாநிலப் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஒருங்கிணைந்த சிறப்புக் கூட்டம் மாநில பொதுச் செயலாளர் வின்சென்ட் பால்ராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநிலப் பொருளாளர் சந்திரசேகர்,மாநிலத் தலைவர் நம்பிராஜ்ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் அண்ணாமலை ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை பொதுச் செயலாளர். வின்சென்ட் பால்ராஜ் முன்மொழிந்தார். மாநிலப் பொருளாளர் சந்திரசேகர் வரவேற்றார். கூட்டத்தில் வருகிற 13ந் தேதிஅன்று சென்னையில் டிட்டோஜேக் சார்பில் நடைபெறவுள்ள கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் நமது இயக்கத்தின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலிருந்து மிக எழுச்சியுடன் பங்கேற்பது. மற்றும் மாவட்டக் கிளைகளின் புதிய பொறுப்பாளர்கள் அனைவரின் முகவரிப் பட்டியல் மற்றும் அனைத்து வட்டாரக் கிளைகளின் தலைவர், செயலாளர், பொருளாளர்,மகளிரணிச் செயலாளர் முகவரிப் பட்டியலை தொகுத்துப் பெறுதல்.மற்றும் பொதுச் செயலாளரால் கொண்டு வரப்படும் இதர தீர்மானங்களை முன்மொழிந்தனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்