தி.மு கழகத் தலைவர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாவட்ட கழக செயலாளர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் இன்று திருச்சி தெற்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டம் அவைத்தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் மாவட்ட கழகச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியாரை போற்றி அவரது திருவுருவ படத்தினை திறந்து வைத்தும், தமிழகத்தின் தொழில்வளத்தை மேம்படுத்தவும், வேலைவாய்ப்பை பெருக்கவும், அந்நியநாட்டின் முதலீடுகளை ஈர்த்து வந்த தமிழக முதல்வர் அவர்களுக்கு இம்மாவட்ட செயற்குழு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறது. தமிழக முதல்வரை ஒருமையில் பேசி விமர்சித்துவரும் அடிமை எடப்பாடி பழனிச்சாமியை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கின்றது. கரூர் மாவட்டத்தில் நடைபெறும் முப்பெரும் விழாவில் நமது திருச்சி தெற்கு மாவட்டத்தின் சார்பாக பெருந்திரளாக கலந்து கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.