தமிழக வெற்றி கழகத்தின் நிறுவனத் தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான தளபதி விஜய் அவர்களின் 51 வது பிறந்த நாளை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் மற்றும் கட்சியினர் கேக் வெட்டியும், பள்ளி மாணவர்கள் மற்றும் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிறுவன தலைவரும் நடிகருமான விஜய் அவர்களின் 51வது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் மாநகர் மாவட்ட இளைஞரணி மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர்
தங்கள் உடல் உறுப்புகளை தானமாக வழங்கி உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழக வெற்றி கழகத்தின் திருச்சி மாநகர் மாவட்ட இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் ஜீவானந்தம் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.