தமிழ்நாடு அரசு மாவட்ட காஜிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் இன்று அதன் தலைவர் ஸலாஹுத்தீன் ஜமாலி ஹழ்ரத் தலைமையில் நடந்தது. தேனி மாவட்ட அரசு காஜி அப்துல் அஹத் பாக்கவி தேவ்பந்தி ஹழ்ரத் கிராஅத் ஓதினார். கூட்டத்தில் திருச்சி மாவட்டஅரசு டவுன் காஜி ஜலீல் சுல்தான் வரவேற்றார்.
பொருளாளரும், நெல்லை மாவட்ட அரசு காஜியுமான முகமது கஸாஸி பாஜில் மழாஹிரி வரவு செலவு அறிக்கை சமர்ப்பித்தார். கூட்டமைப்பின் செயலாளர் முஜிபுர் ரகுமான் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த கலெக்டர் தலைமையில் காஜிகள் உள்ளிட்ட மத தலைவர்கள் கொண்ட மதநல்லிணக்க குழுவை தமிழக அரசு நியமிக்க வேண்டும். உலமாக்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் இருசக்கர வாகனத்தை உலமா நலவாரியத்தில் பதிவு பெற்ற அனைத்து ஆலிம்களுக்கும் வழங்கிட வேண்டும். உலமாக்களின் ஓய்வூதியத்தை அதிகப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஹாஜிகள் கலந்து கொண்டனர். முடிவில் தென்காசி மாவட்ட அரசு காஜி முகைதீன் பைஜி ரஷாதி நன்றி கூறினார்.