தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் 17வது மாவட்ட மாநாடு திருச்சி ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. ஸ்ரீரங்கம் கிளை செயலாளர் ஸ்ரீரங்கம் கிளை தலைவர் சைவ ராஜூ தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் மருதநாயகம் ஸ்ரீரங்கம் எஜுகேஷனல் சொசைட்டி செயலாளர் கஸ்தூரி ரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாநாட்டில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மேனாள் மாநில பொதுச் செயலாளர் ராமலிங்கம் கலந்து கொண்டு தனது கருத்துரையை எடுத்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து மாநில அளவில் சிறந்த பள்ளிகளுக்கான விருது பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது மேலும் 2023 துளிர் திறனறிதல் தேர்வில் பங்கு பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு மெடல் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது மேலும் கடந்த ஓராண்டில் சிறப்பாக பணியாற்றிய கருத்தாளர்களை பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது. மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக ஏஜிஎம் கல்வி நிறுவனங்கள் கல்வியாளர் மனோகரன் ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை இயற்பியல் ஆசிரியர் சுந்தர்ராஜன் ஸ்ரீரங்கம் எஜுகேஷனல் சொசைட்டி உறுப்பினர் குமார் வட்டார கல்வி அலுவலர் ஜெயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் மாநாட்டில் இறுதியாக ஸ்ரீரங்கம் கிளை பொருளாளர் கௌரி நன்றியுரை ஆற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்