தமிழ்நாடு இரும்பு வியாபாரிகள் நல சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் திருச்சி பாலக்கரை மீனாட்சி திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு ஈரோடு மாவட்ட பழைய இரும்பு வியாபாரிகள் சங்க தலைவர் பாரூக் வரவேற்புரை ஆற்றினார். மாநில அமைப்பாளர் சிவக்குமார் மாநில நல சங்க பொறுப்பாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பாதுகாப்பு பேரவை தலைவர் சவுந்தரராஜன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் புதிய இரும்பு மற்றும் பழைய இரும்புக்கு அதிகப் படியான ஜிஎஸ்டி விதிக்கப்படுவது குறித்தும்,
அதேபோல் அரசு அதிகாரிகள் இலக்கு நிர்ணயித்து வணிகர்களிடம் ஒரு லட்சம் முதல் 2 லட்சம் மூன்று லட்சம் என அபராதம் போடுகின்றனர். எதற்கு என்றால் ஒரு குடோனில் இருந்து எவ்வளவு இரும்பு பொருட்களை ஏற்றி இருக்கிறோம் என்பதை எடை மெஷினில் எடை போட்ட பிறகுதான் பில் போட முடியும் ஆனால் எடை மெஷின் போடுவதற்காக செல்லும் வாகனங்கள் டெலிவரி செலான் போடலாம் என்று ஜிஎஸ்டி சட்டமே கூறுகிறது.
ஆனால் இந்த அரசு அதிகாரிகள் அதனை ஒப்புக் கொள்வதில்லை ஈ வே பில் போடாமல் எடை மெஷின் பகுதிக்கு வாகனங்கள் வரக்கூடாது என்று கூறுகின்றனர் இது தொடர்பாக தமிழக வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி அவர்களிடம் கோரிக்கை மனு அளிப்பதென இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. என தெரிவித்தார்