திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் மணிமாணிக்கம் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் வாக்குறுதிகளை வருகிற பட்ஜெட்டிலாவது நிறைவேற்ற வேண்டும். 10 ஆண்டுகள் பணிமுடிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு ரூ.6 ஆயிரத்து 750 குடும்ப ஓய்வூதியமாக வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.