பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட விவசாயிகளிடம் விவசாயிகளிடம் தேர்தல் அறிக்கை குறித்த கருத்து கேட்பு கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ரவி மினி ஆளில் இன்று நடைபெற்றது. இந்த விவசாயிகள் கருத்துக்கேற்ப கூட்டத்திற்கு பாஜக மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார் விவசாய அணி மாவட்ட தலைவர் சக்திவேல் வரவேற்புரை ஆற்றிட விவசாய அணி மாநில துணைத்தலைவர் கோவிந்தராஜன் மாநில செயலாளர் பூண்டி வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இந்த கருத்து கேட்பு கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக தேசிய செயற்குழு உறுப்பினர் பாராளுமன்றத் தேர்தல் அறிக்கை குழு தலைவர் எச்.ராஜா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பாரதிய ஜனதா கட்சியின் கருத்து கூட்டத்திற்கு விவசாய அணி திருச்சி மாநகர் மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா பேசியது.. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, பாஜக சார்பாக தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளின் கோரிக்கைகள் நிறை, குறைகளை குறித்து கருத்து கேட்பு நடத்தி கொண்டிருக்கிறோம். அந்த வகையில் இன்று திருச்சியில் விவசாயிகளை சந்தித்து கருத்து கூட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகளின் சில முக்கிய கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். மத்திய அரசு விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டை பெருமைப்படுத்தும் அளவிற்கு வேளாண்மையில் புரட்சி செய்த விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது, என்பது நாம் அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரை தொடர்ந்து இந்திய நாட்டில் விவசாயிகளுக்கும் மட்டுமல்லாமல் பல்வேறு துறைகளில் சிறப்பாக மக்களுக்காக பணியாற்றிய தலைவர்களுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்தே நாம் அனைவரும் தெரிந்து கொள்ளலாம் பாஜக, மக்களுக்காக செயல்படக்கூடிய அரசாகும். வேறுபாடு, பிரிவினை இல்லாமல் திறமையானவளுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. சிறு,குறு விவசாயிகளுக்கு உதவிட மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதனால் பல ஆயிரம் கோடி விவசாயிகள் பயனடைந்து வருகிறார்கள். ஆனால் மாநில அரசு விவசாயிகளுக்கு எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை.

GST என்பது மத்திய, மாநில ஆகிய 2 வகைபடும். அதில் மாநில நிதியை மத்திய அரசுக்கு கொடுக்கவில்லை. ஆனால் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு எவ்வளவு கொடுக்க வேண்டுமோ அதை முழுமையாக கொடுத்துள்ளனர். மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டிற்கு குறைவாக தான் கொடுத்துள்ளனர் என்று கூறுகிறார்கள். *நான் கேட்கும் கேள்விக்கு தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 24 மணி நேரத்தில் பதில் அளிக்க வேண்டும்*தமிழ்நாட்டில் அதிக வருவாய் ஈட்டக்கூடிய மாவட்டங்களான கோயம்புத்தூர், திருப்பூர், சென்னை ஆகிய 3 மாவட்டங்களில் பெறப்படும் வருவாயை மற்ற எந்த மாவட்டத்திற்கும் செலவு செய்யக்கூடாது என அப்பகுதி மக்கள் கூறினால் அதை அமைச்சர் தங்கம் தென்னரசு அல்லது திமுக அரசு ஏற்றுக்கொள்ளுமா? இதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு நாளை காலைக்குள் பதில் அளிக்க வேண்டும் என பாஜக தலைவர் எச்.ராஜா தெரிவித்தார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்