தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மைய சங்கம் சார்பில் தமிழ்நாடு பதிவுத்துறை அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில சங்க தேர்தல் சங்க கட்டிடத்தில் இன்று நடைபெற்றது இந்த தேர்தலுக்கு மாநில தலைவர் மதுரை தலைமை தாங்கினார் அகில இந்திய தலைவர் முனைவர் கணேசன் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் மாநில தேர்தல் ஆணையர் சண்முகம் அவர்களால் தேர்தல் நடத்தி வைக்கப்பட்டது தேர்தலில் மாநில தலைவராக சம்பத்குமார் மாநிலத் துணைத் தலைவர் ஆறுமுகராஜ் மாநில துணைத்தலைவர் முனியசாமி பொதுச் செயலாளர் நல்லுசாமி மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் சரவணன் மாநில பொருளாளர் ரவிச்சந்திரன் மாநில தணிக்கையாளர் சுந்தரராஜன் மாநில அமைப்பு செயலாளர் முருகன் மாநில பிரச்சார செயலாளர் கோவிந்தராஜ் மாநில மகளிர் அணி செயலாளர் கலைவாணி ஆகியோர் புதிய நிர்வாகிகளாக பதவியேற்றுக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து நடந்த மாநில செயற்குழு கூட்டத்தில் பதிவு துறையில் உள்ள பதிவுத்துறை தலைவர் அலுவலகம் துணை பதிவு துறை தலைவர் அலுவலகம் மாவட்ட பதிவாளர் அலுவலகம் 1 நீர் 2 நீர் இணை சார் பதிவாளர் அலுவலகம் அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிலை அரசாணை எண் 132/98 ஒரு சார்பதிவாளர் அலுவலகத்தில் இரண்டு அலுவலக உதவியாளர் நியமனம் செய்யப்பட வேண்டும். பதிவுத்துறையில் ஏற்படும் லஞ்ச ஒழிப்பு நடவடிக்கைக்கு அலுவலக உதவியாளர்கள் பாதிப்புக் கொள்ளா இருக்கிறார்கள் அதனை தவிர்த்திட வெளியாற்றில் ஒன்றாக வெளியேற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.