தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத் துறையின் சார்பில் பொறியாளர் சங்கம் மற்றும் உதவி பொறியாளர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு உதவி பொறியாளர் சங்கத்தின் தலைவர் பொறியாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார் திருச்சி கிளையின் தலைவர் ஐஸ்வர்யா மற்றும் செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதனைத் தொடர்ந்து நடந்த பொறியாளர் சங்க பொதுக்குழு கூட்டத்திற்கு பொறியாளர் சங்கத்தின் மாநில தலைவர் பொறியாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார் அமைப்பு செயலாளர் மதன் வரவேற்புரை ஆற்றிட திருச்சி கிளை சங்கத்தின் பொறியாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார்.
மேலும் பொறியாளர் சங்கம் மற்றும் உதவிப் பெரியார் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்களாக :- 2022 2023 ஆம் ஆண்டிற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய ஒருங்கிணைந்த பொறியியல் தேர்வில் தேர்ச்சி பெற்ற பொறியாளர்களில் நீர்வளத்துறையில் 201 உதவி பொறியாளர்களுக்கும் பொதுப்பணித்துறையில் 302 உதவி பொறியாளர்களுக்கும் வரலாற்று சிறப்புமிக்க வகையில் பணி நியமன ஆணை வழங்கிய தமிழக முதலமைச்சருக்கும், உறுதுணையாக செயல்பட்ட நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சருக்கு நன்றியை பாராட்டுக்களையும் பொதுக்குழு கூட்டத்தின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறது.
தற்காலிக பதவி உயர்வு மூலம் பதவி உயர்வு பெற்ற பொறியாளர்களுக்கு பதவி உயர்வு பட்டியல் நிரந்தர பதவி உயர்வு மூலம் பதவி உயர்வு வழங்கி விரைவு நடவடிக்கை மேற்கொள்ள நமது இரு துறைகளில் முதன்மை தலைமை பொறியாளர் மற்றும் தலைமை பொறியாளர் அவர்களை வலியுறுத்தியும், ஒருங்கிணைந்த பொதுப்பணி துறையை பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை மற்றும் என இரண்டாக பிரிக்கப்பட்டதை தொடர்ந்து நிர்வாக ரீதியிலான மாற்றங்களை கருத்தில் கொண்டும் பதவி உயர்வில் பொறியாளர்கள் பணி நலன்களை பேணிடவும் பணி விதிகள் துறை விதிகள் ஆகியவற்றில் உரிய மாற்றங்களை செய்திட இரு துறைகளில் முதன்மை தலைமை பொறியாளர்களை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.