தமிழ்நாடு மருத்துவ ஆய்வக நுட்புநர் சங்கத்தின் 50 ம் ஆண்டு நிறைவு விழா, தமிழ்நாடு மருத்துவ ஆய்வகங்கள் சங்கத்தில் 12 ம் ஆண்டு நிறைவு விழா,ஆய்வக நுட்புணர்களுக்கான மாநில அளவிலான கல்வி கருத்தரங்கம் ஆகிய முப்பெரும் விழா இன்று திருச்சி ஐ.எம்.ஏ. அரங்கத்தில் நடைபெற்றது.
மாநில அமைப்பாளர் மார்டின் தேவதாஸ் வரவேற்று பேசினார். தமிழ்நாடு மருத்துவ ஆய்வகங்கள் சங்கத்தின் மாநில தலைவர் கண்ணன் தமிழ்நாடு மருத்துவ ஆய்வக நுட்புநர் சங்கத்தின் மாநில தலைவர் இளங்கோவன் மாநில பொதுச் செயலாளர் தமயந்தி மாவட்ட செயலாளர் லோகநாதன் மாநில செயலாளர் மரிய தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் டாக்டர் என் எஸ் பிரசாத் தலைமை தாங்கினார்.
இந்த முப்பெரும் விழாவில் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் மருந்தாளுனர்களுக்கு கவுன்சில் இருப்பது போன்று ஆய்வுகூட நுட்புணர்களுக்கும் கவுன்சில் அமைத்திட வேண்டும்.தனியார் துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆய்வு கூட நுட்புநர் களுக்கு தொற்று நோய் ஏற்பட்டு உயிரிழக்கும் நிலை இருக்கிறது ஆகவே அவர்களின் குடும்ப வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு சமுதாய காப்பீடு செய்து லேப் டெக்னீசியன் குடும்பங்களை காப்பாற்ற வேண்டும் மருந்து கடைகளில் ஆய்வக பரிசோதனை மேற்கொள்வதை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.