எஸ்ஜிஎஃப்ஐ-யில் ஒரு அங்கமாகவும் இந்தியன் ஒலிம்பிக் சங்கத்தால் அங்கீகாரம் பெறப்பட்ட “அஷ்டடோ மார்தானி அகடா” ஃபெடரேஷனில் இணைப்பு பெற்ற திருச்சிராப்பள்ளி மாபெரும் முதலாவது பயிற்சி முகாம் சையது முர்துஷா மேல்நிலைப் பள்ளியில் வழக்கறிஞர் டாக்டர் ராமச்சந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்த பயிற்சி முகாமில் மாநில கழகத் தலைவர் ஷேக் முகமது மற்றும் பொதுச் செயலாளர் புவனேஸ்வரி, மற்றும் பொருளாளர் உதயகுமார், மற்றும் திருச்சி மாவட்ட செயலாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு அஷ்டடோ மார்தானி பயிற்சி வழங்கப்பட்டது. இந்த பயிற்சி முகாமில் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
“அஷ்டடோ மார்தானி அகடா” பொதுச் செயலாளர் புவனேஸ்வரி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
தமிழர்களின் கலையான அஷ்டடோ மார்தானி அகடா கலை வடமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அவர்களுக்கு ஏற்றார் போல் வடிவமைத்து அங்கீகாரம் பெற்றுள்ளனர். அதனை மீண்டும் நமது தமிழகத்தில் மீட்டு கொண்டு வந்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் அங்கீகாரம் கிடைக்க செய்ய வேண்டும். இந்த அஷ்டடோ மார்தானி அகடா கலை உடல் எடை தகுதி பிரிவு மற்றும் வயது தகுதி பிரிவின் கீழ் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு தகுதி தேர்வு நடைபெற்றது.
இந்த தகுதி தேர்வானது ஒரு மாவட்டத்தில் இருந்து 244 பேர் எனவும், எஸ்டிஎப் 74-பேர் என மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு போட்டிகளில் பங்கு பெற உள்ளனர். தமிழக அரசு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் இந்த அஷ்டடோ மார்தானி அகடா கலைக்கு அங்கீகாரம் கிடைக்க தமிழக அரசு உரிய சலுகை வழங்கிட வேண்டும் என கோரிக்கை வைத்தார்